செய்திகள் :

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! - ஏன் தெரியுமா?

post image

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத்தில் முக்கியமானது தான்.

மைதானத்தில் அம்பயர்கள்
மைதானத்தில் அம்பயர்கள்

அம்பயர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றிவிடும். இந்த கிரிக்கெட் அம்பயர்கள் தங்களுடைய பணிக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியுமா?

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில், நடுவர்கள் நான்கு நாள் போட்டிக்கு கிட்டத்தட்ட 1.6 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார்கள்.

ஐ.பி.எல்- இல் அதிக சம்பளம்

'அவர்களின் தரம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, ஒரு நாள் வருமானம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

ஐ.பி.எல்- இல் பணியாற்றும் கள நடுவர் ஒரு போட்டிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் பெறுகிறார்.

நான்காவது நடுவர் மற்றும் டிவி/மூன்றாம் நடுவர் தலா 2 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுவர்.

மைதானத்தில் அம்பயர்கள்
மைதானத்தில் அம்பயர்கள்

இதில், ஐசிசி-யின் எலைட் பேனலில் உள்ள அனுபவம் வாய்ந்த நடுவர்களுக்கு ஐ.பி.எல்-இல் ஒரு போட்டிக்கு ரூபாய் 3.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

ஒரு ஐ.பி.எல் சீசனில் 12 முதல் 14 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினாலே ஒரு நடுவர் கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாயில் இருந்து 45 லட்ச ரூபாய் வரை வருமானத்தை ஈட்ட முடியும்.

ஆனால், சர்வதேச டி20 போட்டிகளில் நடுவர்களுக்கான ஊதியம் சற்று குறைவு தான்.

சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான சம்பளம்

ஒரு சர்வதேச டி20 போட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் முதல் 1.25 லட்ச ரூபாய் வரை தான் சம்பளம் வழங்கப்படுகிறது.

சர்வதேச டி20 போட்டிகளுக்கான அவர்களின் ஊதியத்தை ஓப்பிடும் போது ஐ.பி.எல் தொடருக்கு ஊதியம் மிகவும் அதிகம்.

ஐ.பி.எல் நடுவர்களுக்கு ஏன் இவ்வளவு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மைதானத்தில் அம்பயர்கள்
மைதானத்தில் அம்பயர்கள்

உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐ.பி.எல், பெரிய ஒளிபரப்பு ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஸ்டேடியங்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டக்கூடிய ஒரு தொடராக இருக்கிறது.

இதனால், பிசிசிஐ-யால் அதிக அளவில் ஊதியம் வழங்க முடிகிறது.

"பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் ல... மேலும் பார்க்க

``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 வி... மேலும் பார்க்க

CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வ... மேலும் பார்க்க

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு ... மேலும் பார்க்க

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30... மேலும் பார்க்க

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர... மேலும் பார்க்க