செய்திகள் :

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

post image

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் முதல் நாள் இரவு கோயிலை பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வந்தபோது கோயில் மெயின் கேட் திறந்து இருந்தது. அதோடு கோயில் கதவும் திறந்து இருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் கோயிலுக்குள் இரண்டு பேர் நுழைந்து திருடுவது பதிவாகி இருந்தது. கோயிலுக்குள் நுழைந்த இரண்டு பேரில் ஒருவர், மிகவும் பவ்யமாக தனது காதைப் பிடித்துக்கொண்டு சாமியிடம் மன்னிப்பு கேட்கிறார். உண்டியல் திருடுவதற்காக மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறார்.

மற்றொருவர் அங்கிருந்த உண்டியலை திறக்க முயற்சி செய்கிறார். முதலாம் நபர் சாமியிடம் மன்னிப்பு கேட்டு முடித்த பிறகு யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டாவது நபர் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த பணத்தை பேக் ஒன்றில் அள்ளிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து கோயில் பூசாரி ஜிதேந்திர பாண்டே கூறுகையில், "காலை 8 மணியளவில், கோயிலுக்கு வந்தபோது, ​​பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு, சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தோம், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களைப் பார்த்தோம். அதன் பிறகு, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். காவல் நிலைய அதிகாரிகளும் ஷீட்லா மாதா கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது.

இது மூன்றாவது சம்பவம். இதற்கு முன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத போது, ​​இரு தெய்வங்கள் அணிந்திருந்த தங்கத்தாலி, தங்கம் உள்ளிட்டவை திருடப்பட்டன. இரண்டாவது சம்பவத்தின் போது, ​​உண்டியல் உடைக்கப்பட்டது, இம்முறையும், இரு கோயில்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன" என்றார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க