ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளைய...
`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.

பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. சிபிஐ மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காது.
விஜய் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டால் அவர் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கத்தின் வாயில் மாட்டிய கதையாக விஜய் சிக்கி விட்டார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அண்ணாமலை நாகரிகமாக பேச தெரியாதவர். எதை சாப்பிட்டால் அவருக்கு பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பாசிச சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடக் கூடாது.
நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், காங்கிரஸ் அகில இந்திய தலைமையும் முடிவு செய்யும். எங்களுக்கு கொள்ளை பக்க அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்துவோம்.
கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்” என்றார்.











