டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்...
'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video
Chhaava திரைப்படம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்று சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தார்.
இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வீடியோ
அதில், "அன்பு நண்பர்களே... இசை எனக்கு எப்போதுமே கலாச்சாரத்தை இணைக்கும், கொண்டாடும், மரியாதை செய்யும் பாதையாக இருந்துள்ளது.
இந்தியா என்னுடைய இன்ஸ்பிரேஷன். அது என்னுடைய ஆசிரியர், வீடு.
சில நேரங்களில் நாம் சொல்வது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பது எனக்கு புரிகிறது.
ஆனால், நான் எப்போதுமே இசை மூலம் மரியாதை செய்யவும், முன்னேற்றவும், சேவை செய்யவும் தான் நினைக்கிறேன்.
கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் தரும் மற்றும் பல மத கலாசாரங்களைக் கொண்டாடும் இந்தியனாக இருப்பதில் நான் என்றுமே பெருமை கொள்கிறேன்.
Jhaala, பிரதமர் மோடி உடன் கலந்துகொண்ட WAVES மாநாடு, ரோஹினூர், நாகா இசை கலைஞர்களுடன் பணிபுரிந்தது... ஹன்ஸ் ஸிம்மருடன் ராமாயண திரைப்படத்தில் பணியாற்றியது என என்னுடைய ஒவ்வொரு படைப்புகளும் என்னுடைய கொள்கைகளைக் கூறும்.
நான் இந்தத் தேசத்திற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று பேசியுள்ளார்.
















