செய்திகள் :

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தெரிந்த சுரேஷ், பிரபாகரனைக் கண்டித்தாராம். ஆனால், பிரபாகரன் தொடர்ந்து அச்சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மதியம் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபாகரன் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பிரபாகரனின் பெற்றோர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்
கைது செய்யப்பட்ட சுரேஷ்

போலீஸாரின் விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பிரபாகரனுக்கும், சுரேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷைத் தேடினர். கொத்தனேரி பகுதியில் படுத்துக்கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்றனர்.

மதுபோதையில் படுத்துக்கிடந்த சுரேஷிடம் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் விக்னேஷ்வரன் மூலம் மது அருந்த அழைத்து பிரபாகரனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்குள்ள கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “கடந்த செப்டம்பர் மாதம், மகளின் காதல் விவகாரத்தில் தன் மகளுக்கு சகோதரன் உறவு முறையான தமிழரசன் என்பவரை தன் மகன் சங்கரபாண்டி அவரது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார் சுரேஷ். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

எம்.புதுப்பட்டி காவல் நிலையம்
எம்.புதுப்பட்டி காவல் நிலையம்

சிறையிலிருந்தபோது அவருடன் நட்பாகப் பழகிய விக்னேஷ்வரன் என்பவரின் உதவியில்தான் பிரபாகரனைக் கொலை செய்துள்ளார் சுரேஷ். சுரேஷ் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் என அனைவருமே ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்” என்றனர்.

மகளின் காதலுக்காக அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது சிவகாசியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்க... மேலும் பார்க்க

கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது

பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி: நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய நான்கு பேர்! - போலீஸார் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர், என்.எஸ்.பி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் சாதிக் பாஷா. இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: வாட்ஸ்அப் காலில் ஆபாச செயல்; ஆதாரத்துடன் புகாரளித்த பெண்ணால் சிக்கிய ஐடி ஊழியர்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 03.05.2026-ம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவர... மேலும் பார்க்க

விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர். இவர், குரண்டி க... மேலும் பார்க்க