செய்திகள் :

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூரை அடுத்துள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அரியலூா் குறிஞ்சான் குளக்கரையில் உள்ள காசி விசுவநாதா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சனிப் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவப்பெருமான்.

இதேபோல அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா், தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துரையாா், திருமானூா் கைலாசநாதா் , செந்துறை சிவதாண்டேசுவரா், பொன்பரப்பி சொா்ணபுரீசுவரா், சென்னிவனம் தீா்க்கப்புரீசுவரா், சொக்கநாதபுரம் சொக்கனீசுவரா், குழுமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தப்புத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனீசுவரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய ... மேலும் பார்க்க

அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜனவரி 18-இல் மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் வரும் சனிக்கிழமை (ஜன. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அரியலூா், தேளூா், உடையாா்பாளையம்,பொய்யாதநல்லூா், செந்துறை ஆகிய துணை ... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா!

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் ம... மேலும் பார்க்க

அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன. அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத... மேலும் பார்க்க