செய்திகள் :

"சிவா உங்களுக்கு ஹீரோ ஆசை வேணாம், காமெடி ரோல் போதும்"- சினிஷ், சிவகார்த்திகேயன் ஷேரிங்ஸ்

post image

'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார்.

அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.

Super hero - Ninja
Super hero - Ninja

அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம்.

இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா, பா.ரஞ்சித் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் இந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன் குறித்து ஜாலியாகப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சினிஷ், "ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி 'வேட்டை மன்னன்' படத்தோட சமயத்தில சிவா கிட்ட ஏதோவொன்னு சொல்லி அவர் மனச கஷ்டப்படுத்திட்டேன். அதுனால் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷம் பேசிக்கல.

என்னோட இணை தயாரிப்பில் வந்த 'பார்க்கிங்' படம் தேசிய விருது வாகியபோது தயக்கமில்லாமல் என்னைப் பாராட்டினார் சிவா." என்றார்.

Nelson: "விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார்" - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்

சிவகார்த்திகேயன் மனதைக் காயப்படுத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சினிஷ்
தயாரிப்பாளர் சினிஷ்

தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சிவகார்த்திகேயன், சினிஷ் எல்லாரும் 'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தவர்கள்.

அந்த நேரத்தில் சினிஷ், 'உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை' என சிவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவா, 'ஹிரோ ஆகனும்னு' ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்.

உடனே சினிஷ் "எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே"னு சொல்லியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ்
சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ்

'வேட்டை மன்னன்' சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு..." - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்

அதற்கு சிவா, "ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?"னு கேட்டிருக்கிறார்.

இடையில் இவர்கள் ஒரு 10 வருடம் பேசாமல் இருந்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்குப் பிறகு "அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொல்லியிருக்கிறார் சினிஷ். ஆனால், "அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. நடிப்பில் கொஞ்சம் பிஸியாகிட்டதால நாங்க பேசிக்க முடியல" என்று சிவா இந்த படபூஜை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன், சினிஷ் இடையேயான இந்த கலகல பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

"களத்துல லிங்கம்தான் பெரிய ஆளு"- Jio Hotstar நிகழ்ச்சியில் வெளியான விகடனின் 'லிங்கம்' புரொமோ

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய 'South Unbound' நிகழ்ச்சி நேற்று (டிச.10) நடைபெற்றது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஜியோ ஹாட்ஸ்... மேலும் பார்க்க

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்‌ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி!

சென்னையில் 'JioHotstar South Unbound' நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், 'JioHotstar' நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் தமிழ்நாடு அரசு மற்று... மேலும் பார்க்க

Bigg Boss: "பிக் பாஸ் டிராமா கிடையாது!" - ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்!

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் 'South Unbound' என்ற நிகழ்வை நேற்றைய தினம் நடத்தியது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நி... மேலும் பார்க்க