செய்திகள் :

சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்புள்ளதா?- வெளியான தகவல் என்ன?

post image

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது.

இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கெனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் வெளியேற்றப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் குஜராத் அணியிலிருந்து தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்காக டிரேடிங் முறையில் கொண்டுவரப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.

சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய அஸ்வினுக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் டிரேடிங் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஏற்க மறுத்துவிட்டதாகவும் இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா தமிழக வீரர்கள் மீது ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்துள்ளார்.

அதன் காரணமாகவே குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர்.

ஆஷிஷ் நெஹ்ரா
ஆஷிஷ் நெஹ்ரா

மற்ற வீரர்களை காட்டிலும் சில கோடிகளில் மட்டுமே அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை வெளியேற்ற ஆஷிஷ் நெஹ்ரா விரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு வருவது கடினம் என்றே தெரிகிறது.

``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு

விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப... மேலும் பார்க்க

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்... மேலும் பார்க்க

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க

மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!

மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர... மேலும் பார்க்க