செய்திகள் :

சுவாமி மலையில் காவல்துறை - இந்து அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

post image

கும்பகோணம் அருகே இந்து அமைப்பினர் சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சுவாமிமலைக்கு வேலுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை குறித்து தற்போது சர்ச்சை எழுந்து, இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சுவாமிமலையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் தங்க. கென்னடி தலைமையில் திருப்பரங்குன்றம் மலைக்கு கையில் வேலுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினரைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து காவல்துறைக்கு இந்து அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க