”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” - முதல...
'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!
உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சிராஜ் இல்லை. பும்ரா ஆட முடியாத காரணத்தால் கடைசி நிமிடத்தில்தான் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி சிராஜ் பேசியிருந்தார்.

சிராஜ் பேசியதாவது, 'இந்த T20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக T20 போட்டிகளில் எனக்கு வாய்ப்பே கிடைக்கலை. அதனாலேயே, ‘இந்த வருஷம் நான் இல்ல’ன்னு மனசுக்குள்ளேயே ஏற்றுக்கிட்டேன்,
15-ஆம் தேதி ரியல் மாட்ரிட் போட்டி இருந்தது.
அதை நேரில் பார்க்க பிளான் போட்டிருந்தேன். அதுக்கப்புறம் ரமலான் வருது… அதுக்கும் சில விஷயங்களை திட்டமிட்டிருந்தேன். ஆனால், கடவுள் எழுதியதை யாரால் மாற்ற முடியும்?
“நான் வீட்டில குடும்பத்தோடு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ பிட்னெஸ் கோச் அட்ரியன் மெசேஜ் அனுப்பினார். அடுத்த சில நாட்களுக்கான உங்களின் பிளான் என்னவென கேட்டார். நானும் ‘இப்போ ரெஸ்ட் தான்’ன்னு சொன்னேன். அடுத்த நிமிஷமே சூர்யா பாய் கால் பண்ணினார். ‘மியான்… ரெடி ஆகு… பேக்கை எடுத்துக்கிட்டு உடனே வா’ன்னு சொன்னார். முதல்ல ஜோக் தான்னு நினைச்சேன். ஆனா உடனே தேர்வாளர் ஓஜா பாயிடமிருந்தும் கால் வந்தது. அப்போதான் உண்மை புரிஞ்சது.

உலகக்கோப்பை அணியுடன் இணைய விமானத்தில் உட்கார்ந்திருந்தபோதுகூட அது கனவு மாதிரி தான் இருந்தது. ‘நான் உண்மையிலேயே உலகக்கோப்பை விளையாடப் போறேனா?’ன்னு தோணிச்சு. கடந்த ஒரு வருடமாக நடந்ததை நினைச்சா, இது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், கடவுள் என் விதியை மாற்றிவிட்டார்' என்றார்.
















