செய்திகள் :

சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செய்த வெங்கி அட்லுரி!

post image

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

'விஸ்வநாத் & சன்ஸ்'
'விஸ்வநாத் & சன்ஸ்'

‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழில் வெளியாகியிருக்கும் சிறப்பு நேர்காணலில் பேசிய சூர்யா தனது நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை படத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் சூர்யா, " நான் நிறைய டிராவல் செய்வேன். அதனால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் இருந்தது. தியா பிறக்கும் போது மூன்று வருடங்களுக்கு நான் பெரியதாக ஊரில் இல்லை.

டிராவல் செய்துக்கொண்டே இருந்தேன். அதனால் தேவ் பிறந்ததற்கு பிறகு தவறை உணர்ந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட ஆரம்பித்தேன். பெண் குழந்தை பிறந்தால் லட்சுமி கிடைத்திருப்பதாக சொல்வார்கள். அது போல தியா பிறந்த பின்பு தான் நான் வீடு வாங்கினேன்.

சூர்யா
சூர்யா

அதனால் வீட்டிற்குள் நுழையும் போது தியாவின் பாதத்தை முதலில் தரையில் வைத்து பின்பு நாங்கள் உள்ளே சென்றோம். இந்த படத்தில் அந்தக் குழந்தை வீட்டிற்குள் முதல் முறையாக நுழையும்போது அதனை செய்யலாம் என்று இயக்குநரிடம் கேட்டேன்.

அவரும் சம்மதம் தெரிவித்தார். அதனால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தை வீட்டிற்குள் நுழையும்போது அவரது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே சென்றோம்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

Mamitha: "ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இன்று..."- மமிதாவைப் புகழ்ந்த சூர்யா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

`கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்னைகளால் அருண்ராஜா காமராஜுடன் படம் இல்லை' - விஷ்ணு விஷால் அறிவிப்பு

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் நடித்துத் தயாரிக்க இருந்த திரைப்படம் கைவிடப்படுகிறது என்று நடிகர் மற்றும் இயக்குநர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."அருண்ராஜா காமராஜுடன் நான் இணையவிருக்க... மேலும் பார்க்க

"முதலில் நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன், ஏனென்றால்..!"- நடிகர் சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ... மேலும் பார்க்க

Karnataka SIR: "வாக்குரிமை நீக்கப்பட்ட வாக்காளர்களில் நானும் ஒருவன்" - வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்

கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிரு... மேலும் பார்க்க

"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறிவது என்ன?

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க