கார்த்திகை தீபம்: புதுக்கோட்டை கிராமச் சந்தையில் பாரம்பர்ய அகல் விளக்கு விற்பனை ...
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?"- கனிமொழி
மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறினாலும், போலீஸார் அடித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டி உறவினர்கள் 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மதுரை சென்ற திமுக எம்.பி கனிமொழி, ஒட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், " மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்?

காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












