செய்திகள் :

செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் அவரது தம்பிக்கு சம்மன் வழங்கிய போலீஸார்! - கரூர் பரபரப்பு

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் கரூரில் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை சம்மன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.d.dixith

இதையடுத்து, கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு அவரது வழக்கறிஞர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சம்மனுடன் வந்தனர்.

அப்போது, அங்கு இருந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் வருகைக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். சம்மன் வழங்க வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்ற போலீஸார் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களான வேலுச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் சம்மனை வாசித்துக் காட்டி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் வரும் திங்கட்கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

samman

இதையடுத்து, சம்மனை பெற்றுக் கொண்ட பெற்றோர் அதில் கையெழுத்திட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் வழங்கப்பட்ட சம்பவத்தால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை; குஜராத்தில் பகீர்

குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட நட்பு கோரிக்கை கொலையில் முடிந்துள்ளது. காஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ், சக்திசிங் என்பவரின் உறவினரான ஒரு பெண்ணுக்... மேலும் பார்க்க