``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்ப...
சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே நடுவழியில் நின்றுள்ளது.
இதற்கு மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால், மெட்ரோ ரயில் நகராமல் நின்றதோடு, உள்ளே மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக சுரங்கப் பாதை வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தொழில்நுட்ப காரணங்களால், மெட்ரோ ரயில் உயர் நீதிமன்றம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே நின்றுவிட்டது.
உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். குறிப்பிட்ட அந்த ரயில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 6.20 மணியளவில் இருந்து வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிரமத்திற்கு வருந்துகிறோம்". என குறிப்பிட்டுள்ளது.
Service Update:
— Chennai Metro Rail (@cmrlofficial) December 2, 2025
Due to technical issue, metro train was halted between high court station and Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Metro Station. Immediate evacuation was done and train has been promptly withdrawn from the line. Normal operations have resumed at 06.20…


















