செய்திகள் :

சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர்

post image

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், ரேஷ்மா, தன்னுடைய அத்தை மகன் விஜி என்பவருடன் பழகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கும் அவரின் அத்தை மகன் விஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரேஷ்மாவை மிரட்டி விட்டு விஜி சென்றிருக்கிறார்.

இதையடுத்து ரேஷ்மா, தன்னுடைய தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து தூங்கியிருக்கிறார். சம்பவத்தன்று அதிகாலையில் ரேஷ்மா தங்கியிருந்த வீட்டின் கதவை விஜி தட்டியிருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்த ரேஷ்மா கதவைத் திறக்கவில்லை.

சடலமாக ரேஷ்மா

இந்தச் சமயத்தில் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்ட விஜி, கதவைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போது இந்த நேரத்தில் எதற்காக நீ வந்தாய் என ரேஷ்மா சண்டை போட, விஜி மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை ரேஷ்மா அவரின் தோழிகளின் முகத்தில் வீசியிருக்கிறார். அதனால் நிலை குலைந்த பெண்கள், அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விஜி, ரேஷ்மாவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் தோழிகள், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலை செய்யப்பட்ட ரேஷ்மா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள விஜியைத் தேடி வருகிறார்கள்.

இந்தக் கொலை குறித்து நம்மிடம் பேசிய சங்கர் நகர் போலீஸார், ``ரேஷ்மாவை கொலை செய்த விஜியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்படை போலீஸார் விஜியை நெருங்கி விட்டனர். அவரிடம் விசாரித்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் ... மேலும் பார்க்க

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க