மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு...
சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?
சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந்து சுகுமார், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார் அதிகாலையில் நிர்வாகிகள் அனைவரும் சென்ற பிறகு சுகுமார் மட்டும் தனியாக அலுவலகத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகு அவர், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து குமரன்நகர் காவல் நிலையத்துக்கும் சுகுமாரின் குடும்பத்தினருக்கும் கட்சியினர் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்தவர்கள், சுகுமாரை மீட்டு கேகே நகரில் உள்ள ESI மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பகுதி செயலாளர் சுகுமார் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுகுமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் சுகுமாருக்கு கடன் தொல்லை இருந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இருப்பினும் சுகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் முழு விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என குமரன் நகர் போலீஸார் தெரிவித்தனர்.



















