செய்திகள் :

சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

post image

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு எழுமலை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 - ம் தேதி பிரவீனிடம் ஏழுமலையின் உறவினரான மணிகண்டன் என்பவர் தகராறு செய்தார். அப்போது தன்னுடைய உறவினர் மகளை காதலிப்பதை விட்டுவிடும்படி மணிகண்டன் மிரட்டியதாகத் தெரிகிறது. ஆனால் பிரவீன், காதலைக் கைவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு மணிகண்டன், தன்னுடைய உறவினர் ஏழுமலைக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் போன் மூலம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பிரவீனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக பிரவீன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரவீன் அம்மா பிரபாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரவீன் அளித்த தகவல், சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை, அவரின் மகன் கெளதம், ஏழுமலையின் உறவினர் மணிகண்டன், கௌதமின் நண்பர் நந்தீஸ் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரவீனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரவீனின் கொலைக்கு நீதிகேட்டு அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

கெளதம்

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பிரவீன், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது ஆணவக் கொலை அல்ல. தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. சம்பவத்தன்று பிரவீனை ஏழுமலையின் குடும்பத்தினர் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது நடந்த தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

மகளின் காதல் விவகாரத்தில் த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை குடும்பத்தினர் கொலை வழக்கில் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க