செய்திகள் :

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

post image

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிறை காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

குட்கா வழக்கில் கைதான பாலாஜி, ராமநாதன்

இதையடுத்து பாலாஜி உயிரிழந்த தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலாஜியின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாலாஜியை சிறைக்காவலர்கள் அடித்தே கொன்று விட்டதாக குற்றம் சாட்டினர். பாலாஜியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை அவரின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் பாலாஜியின் மரணத்துக்கு நீதி கேட்டு சேலையூர் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அதனால் சேலையூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தால் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பாலாஜியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் பாலாஜியின் உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க

சகோதரியின் கணவர் மீது காதல்: வருங்கால கணவனை வரவைத்து கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

புனேயில் ஷியா என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவத்த... மேலும் பார்க்க

ரத்தவெள்ளத்தில் கணவன்; உயிருக்குப் போராடிய மகன்; போனை பார்த்துகொண்டிருந்த தாய்; பெங்களூருவில் பகீர்

கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு ... மேலும் பார்க்க

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்... மேலும் பார்க்க