செய்திகள் :

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

post image

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்ட அவர், சென்னை சென்ட்ரலுக்கு வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓய்வெடுத்த அந்தப் பெண், இரண்டாம் வகுப்பு பெண்கள் காத்திருப்போர் அறையில் உள்ள குளியலறையை பயன்படுத்த சென்றார். அப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த அறை மூடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இன்னொரு பயணிகள் காத்திருப்போர் அறைக்குச் சென்றார் அந்தப் பெண். அங்கிருந்த குளியல் அறையில் அவர், குளித்திருக்கிறார். அப்போது அருகில் உள்ள இன்னொரு குளியலறையிலிருந்து யாரோ ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுப்பதை அந்தப் பெண் கவனித்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர் , கூச்சலிட்டிருக்கிறார்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

உடனே காத்திருப்போர் அறையிலிருந்தவர்கள், என்னவென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்திருக்கிறார்கள். உடனே அவர், வீடியோ எடுத்த தகவலை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து வீடியோ எடுத்தவரை சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரின் செல்போனை ஆய்வு செய்திருக்கிறார்கள். பின்னர், அந்த நபரையும் செல்போனையும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் பெயர் அருண் என்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர், தி.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். விசாரணைக்குப்பிறகு அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க

சகோதரியின் கணவர் மீது காதல்: வருங்கால கணவனை வரவைத்து கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

புனேயில் ஷியா என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவத்த... மேலும் பார்க்க

ரத்தவெள்ளத்தில் கணவன்; உயிருக்குப் போராடிய மகன்; போனை பார்த்துகொண்டிருந்த தாய்; பெங்களூருவில் பகீர்

கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு ... மேலும் பார்க்க

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்... மேலும் பார்க்க