செய்திகள் :

சென்னை: விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

post image

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படும் கார்கோ வளாகத்தில், பார்சல் ஒன்று கேட்பாரற்று, நீண்ட நேரமாக கிடந்தது. அதைப் பார்த்த பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் அந்தப் பார்சலில் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அந்த பார்சலில் மருத்துவ ரசாயன பவுடர் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண் மற்றும் முகவரியை தொடர்பு கொண்ட போது அவை அனைத்தும் போலி என்று தெரிய வந்தது.

போதைப்பொருள்

இதையடுத்து அந்த பவுடரை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆய்வில், அந்தப் பவுடர், போதைப்பொருள் என்று தெரியவந்தது. பார்சலில் இருந்த 5 கிலோ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 5 கோடி ரூபாயாகும். பின்னர் இது குறித்து கார்கோ சுங்கத்துறை அதிகாரிகள், அந்த போதைப்பொருள் பார்சலை பறிமுதல் செய்ததோடு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருளை அனுப்பியவர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``வெளிநாட்டுக்கு இந்தப் போதைபொருளை, சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்க போதை கடத்தல் கும்பல் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுங்கச் சோதனை தீவிரமாக இருந்ததால் பார்சலை அங்கேயே விட்டு விட்டு அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. அதனால் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றனர்.

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி

கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காய... மேலும் பார்க்க

ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" - எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க