செய்திகள் :

சென்னை: விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தி.மு.க கவுன்சிலர், அ.தி.மு.க பிரமுகர் கைதான பின்னணி!

post image

சென்னையில் குடியிருக்கும் 25 வயதான இளம்பெண், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி இவர், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் பணியிலிருந்தபோது திருவள்ளூரைச் சேர்ந்த பிரபாகரன், அவரின் நண்பன் தியாகு ஆகியோர் விமானத்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவர்களை விமான பணிப்பெண், இருக்கையில் அமரும்படி கூறியிருக்கிறார். அதற்கு பிரபாகரனும் தியாகும் விமான பணிப்பெண்ணிடம் உனக்கு எந்த ஊரு என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். உடனே பணிப்பெண், மதுரை என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட பிரபாகரனும் தியாகும் மதுரையில் ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா என கேட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க பிரமுகர் தியாகு

உடனே பணிப்பெண், அங்கிருந்து சென்றதோடு இருவரும் பேசியதை விமானத்திலிருந்த தன்னுடைய உயரதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகும் இருவரும் சேர்ந்து அந்தப் பணிப்பெண்ணை ஒருமையில் பேசி அழைத்திருக்கிறார்கள். பின்னர், அவருக்கு சொல்ல முடியாத வகையில் பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட பணிப்பெண், பணி முடிந்ததும் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, 74 BNS act and 4 of TNPWH Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய பிரபாகரனுக்கும் தியாகுவுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில்தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்னொரு விமானத்தில் 2-ம் தேதி இருவரும் வந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பிரபகாரன், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் தி.மு.க-வில் இருக்கும் இவர், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவரின் நண்பன் தியாகு இன்ஜினீயரிங், சட்டம் படித்துவிட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவர் அ.தி.மு.க பிரமுகர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இவருக்கு கட்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை

கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங... மேலும் பார்க்க

திருத்தணி பேருந்து நிலையம்: `அண்ணா - கலைஞர்' மாற்றும் திமுக; அமைதி அதிமுக; டைப்பிங் மிஸ்டேக் நாதக!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்...'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 170 ஏக்கரில் ரூ.275 கோடி மதிப்பிலான ஓபியம் தோட்டம் - கண்டுபிடித்து அழித்த காவல்துறை

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் செடிகள் வளர்க்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!

மது போதையில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு சாலையோரம் நின்ற அப்பாவிகளை சரமாரியாக வெட்டியது. இதில் வட மாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல' - திருமணம் மீறிய உறவால் அக்காவை கொன்ற தம்பி

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரும், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... மேலும் பார்க்க