செய்திகள் :

சென்னை: ஹவுஸ் ஓனரிடம் கைவரிசையைக் காட்டிய ஆட்டோ டிரைவர்; தோழியுடன் சிக்கியது எப்படி?

post image

சென்னை, நெற்குன்றம், சக்தி நகர், 12-வது தெருவில் கார்த்திகேயன் (40) என்பவர் டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 24.12.2025-ம் தேதி மாலை பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்த போது, வெளிநாட்டு கரன்சிகள் உள்பட மொத்தம் சுமார் 9.33 லட்சம் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கார்த்திகேயன் கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார்

தொடர்ந்து போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கார்த்திகேயனின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தத விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமாரும் (25)அவரின் தோழியான நெற்குன்றத்தைச் சேர்ந்த ஸ்நேகா (21) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 66,000 ரூபாய், 55,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் மீட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில்,

“எங்களிடம் புகாரளித்த கார்த்திகேயனின் வீட்டின் முதல் தளத்தில் ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை கார்த்திக்கேயன் வீட்டின் அருகேயே மறைத்து வைத்து விட்டு வெளியில் சென்றிருக்கிறார். அதை நோட்டமிட்ட நிதிஷ்குமார், வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியிருக்கிறார். பின்னர் அவைகளை தோழி ஸ்நேகாவிடம் கொடுத்திருக்கிறார். சி.சி.டி.வி மூலம் நிதிஷ்குமாரை கண்டறிந்து பணத்தை மீட்டுள்ளோம்" என்றனர்.

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி... மேலும் பார்க்க

AI உதவியால் Hydroponics கஞ்சா; Digital Currency ஆன ரூ.4.5 கோடி; MBA பட்டதாரிகள் கைதான பின்னணி என்ன?

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக... மேலும் பார்க்க

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மே... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகார... மேலும் பார்க்க

நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.மதுபாட்டில்களில் க... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்க... மேலும் பார்க்க