செய்திகள் :

`சேகர்பாபு பேசினது சங்கடமா போச்சு; உடனே துணை முதல்வர்..'- தவெக மேடையில் பாடியது குறித்து வேல்முருகன்

post image

சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம்.

அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'கொள்ளையடித்தக் கூட்டம்' என்றெல்லாம் வார்த்தைகள் இருந்தன.

இது தொடர்பாக நாம் வேல்முருகனிடம் அப்போதே கேட்டதற்கு,

``நான் எல்லோருக்கும் பொதுவான ஆளுங்க. பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு கூட‌ 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். மூணாவது வருஷ தொடக்க விழான்னு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என்கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். வந்திருந்தவங்க நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. இதைத் தாண்டி வேற எதையும் நான் காதுல ஏத்திக்கப் போறதில்லை" எனச் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களூக்கு முன் தமிழ்நாடு அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பாடகர் வேல்முருகனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விருதை வழங்கியது துணை முதல்வர் உதயநிதி.

பாடகர் வேல்முருகன்

விழாவில் வேல்முருகனின் பெயர் வாசிக்கப்பட்டு, அவர் மேடையருகே சென்றதும், அவரைப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, 'பாடகரே சமீபத்திய உங்க ஆடலும் பாடலும் பார்த்தோம். நல்லா இருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உங்க மேல வருத்தம்' என்றாராம்.

இது குறித்து வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

''தேர்தல் நேரம் வந்திடுச்சுன்னாலே எங்களைப் போன்ற பாடகர்களுக்கு இது ஒரு பெரிய சங்கடம். எல்லாக் கட்சியும் கச்சேரிகளுக்குக் கூப்பிடுவாங்க. கலைஞர்களா யார்கிட்டயும் மறுப்புச் சொல்ல முடியாது. போய் பாடுகிற இடங்கள்ல சமயங்கள்ல ஏதாவது கூட்டிக் குறைச்சுப் பாட வேண்டி வந்திடுது. அது நாங்க விருப்பப் பட்டு பண்றதில்லை. உடனே 'காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பாடுவீங்களா'னு கேப்பீங்க. கோயில் கொடைக்குப் போறோம். திருவிழா முடிஞ்ச கடைசி நாள் ரெண்டு சினிமா பாட்டு பாடுங்கனு சொன்னா பாடுவாங்க இல்லையா, அது போலத்தான் எங்களை விரும்பி அழைக்கிறவங்க வேண்டுகோள் வைக்கிறப்ப கொஞ்சம் முன்னப் பின்ன நடந்துக்க வேண்டியிருக்கு.

udhayanithi stalin

அதனால ஒரு மேடையில பாடறதை வச்சு எங்களை முத்திரை குத்த வேண்டாம்னு கேட்டுக்க விரும்பறேன்.

தவெக மேடையில நான் பாடிய அடுத்த நாளே அது தொடர்பான என்னுடைய விளக்கத்தையும் தந்துட்டேன், அந்தப் பிரச்னை அன்னைக்கே முடிஞ்சது.

சமூக ஊடகங்களில்தான் சிலர் எப்பவும் ஏதாவது சர்ச்சை கிடைக்காதானு தேடிட்டிருக்காங்க. அவங்கதான் சின்ன பிரச்னையா இருந்தாலும் பெரிசு படுத்திடுறாங்க.

சினிமா விழாவுல விருது வாங்கறதுக்கு முன்னாடி அமைச்சர் எங்கிட்ட அப்படிச் சொன்னது நிஜம்தான். அவர் அப்படிப் பேசினதும் எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் போச்சு. என்ன சொல்றதுனு யோசிட்டிருந்தப்பவே துணை முதல்வர் அவர் பங்குக்கு 'எங்க வருமானம் வருதோ அங்க போக வேண்டிதானே'னு சொல்லிட்டார். ஒரு மாதிரி ஆகிடுச்சு. உடனே துணை முதல்வர் சிரிச்சுகிட்டே, 'நீங்க எல்லாருக்கும் பொதுவானவர்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்லி, அந்தச் சூழலை எளிதாக்கினார்.

அவர்கிட்ட ஏற்கெனவே அறிமுகமானவங்கிற முறையில அவர் அதை சீரியஸா எடுத்துக்கிடலைன்னுதான் தெரிஞ்சது. இருந்தாலும் அந்த நேரத்துல அது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது" என்கிறார்.

சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" - புதிய கட்சி தொடங்கிய சசிகலா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடு என பரபரப்பான தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். சமீப நாட்களாக, சசிகலா புதிய கட்சி ஒன்ற... மேலும் பார்க்க

ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ்! | TVK

தவெக-வின் செயல்வீரர்கள் கூட்டம் வில்லிவாக்கத்தில் நடந்திருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சில ஜாலியான ரகளையான மொமெ... மேலும் பார்க்க

`பக்குவமானவர்; அவர் திமுக-வில் இணைந்தால் வரவேற்பேன்!' - ஓபிஎஸ் குறித்து திருமாவளவன்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள்... மேலும் பார்க்க

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க