``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ரா...
சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக-வில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் நேற்று முன்தினம் (நவ.26) செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன்.
இந்நிலையில் நேற்று (நவ. 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.
இரண்டு பதவிகள்
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் என இரண்டு பதவிகளை வழங்கியிருக்கிறார்.
தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து இன்று (நவ.28) புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " அமித் ஷாவின் கன்ட்ரோலில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். தவெகவை பாஜகவிற்கு கொண்டு செல்லும் ஸ்லீப்பர் செல்தான் அவர்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து செங்கோட்டையனை சேகர் பாபு அழைத்தாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, " ஒருவர் கட்சியில் இருந்து வெளியேறினால் அவர்களை மற்ற கட்சிகள் அழைப்பது இயற்கை. செங்கோட்டையன் ராஜினாமா செய்கின்ற முடிவுக்கு வந்தப் பிறகு, வாருங்கள் என்று சேகர்பாபு நட்பு ரீதியில் அழைத்திருக்கலாம்" பதிலத்திருக்கிறார்.















