சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ர...
`உங்கள் தந்தையின் உழைப்பு எனக்கு வேண்டாம்’ - பெண் வீட்டார் கொடுத்த ரூ.31 லட்சத்தை நிராகரித்த மணமகன்
திருமணம் என்றாலே வரதட்சணைதான் பெரும்பாலும் முதலில் பேசப்படும். அந்த வரதட்சணையால் எத்தனையோ திருமணங்கள் நின்று இருக்கிறது. எத்தனையோ பெண்கள் வாழ முடியாமல் பெற்றோர் வீட்டில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை பணம் ரூ.31 லட்சத்தை மணமகன் தனக்கு வேண்டாம் என்று கூறி திரும்ப கொடுத்துவிட்டார். அங்குள்ள முஜாபர்நகர் அருகில் உள்ள நக்வா என்ற கிராமத்தை சேர்ந்த அவதேஷ் என்பவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் தனது தந்தையை இழந்த அதிதி சிங் என்ற பெண்ணைத்தான் அவதேஷிற்கு பேசி முடித்து இருந்தனர்.
திருமண நாளில் பெண் வீட்டார் வரதட்சணையாக ரூ.31 லட்சத்தை தட்டில் வைத்து மணமகனிடம் கொடுத்தனர். அதனை பெண் வீட்டார் மிகவும் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் இப்பணம் மணமகனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பணத்தை வாங்க மறுத்த மணமகன் அவதேஷ், இந்த பணத்தை வாங்க எனக்கு உரிமை இல்லை என்றும், இது உங்களது தந்தையின் கடின உழைப்பில் வந்தது என்றும், அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
பாரம்பரியமாக திருமண நாளில் பணம் கொடுப்பது வழக்கம். திடீரென மணமகன் வரதட்சணை பணம் முழுவதையும் வேண்டாம் என்று சொன்னவுடன் பெண் வீட்டாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களிடம் இருந்த ரூ.31 லட்சத்தில் அவதேஷ் வெறும் ஒரு ரூபாயை மட்டும் சம்பிரதாயத்திற்கு வாங்கிகொண்டார். பாக்கி பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். மணமகனின் இச்செயலை கண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
`ரூ.31 லட்சத்தை யாராவது வேண்டாம்’ என்று சொல்வார்களா என்று வெளிப்படையாக பேசினர். ஆனால் அதனைப்பற்றி கண்டுகொள்ளாத அவதேஷ் வரதட்சணை பணத்தை வாங்காமல் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இது குறித்து அவதேஷ் கூறுகையில்,'' எனது மனைவி அதிதி சிங்கின் குடும்பத்தினர் திருமண நாளில் எங்களுக்கு கொடுத்த ரூ.31 லட்சத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஏனென்றால் நாங்கள் வரதட்சணைக்கு எதிரானவர்கள்'' என்று தெரிவித்தார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் மணமகனை வெகுவாக பாராட்டினர். மணமகள் முழு திருப்தியோடும், மகிழ்ச்சியோடும் கணவன் வீட்டிற்கு சென்றார்.




















