``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
குஜராத்: '20 கிலோ எடை; 3 அடி உயரம்' - உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மருத்துவரான இளைஞரின் பயணம்!
குஜராத் மாநில பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரையா(25). மருத்துவம் படித்து முடித்துள்ளார். ஆனால் அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்து வந்தது. கணேஷ் உயரம் 3 அடிதான்.
அதோடு அவரது உடல் எடையும் வெறும் 25 கிலோதான். அப்படி இருந்தும் போராடி மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால் உயரம் குறைவாக இருக்கிறது என்று கூறி அவருக்குப் படிக்க சீட் கொடுக்க மறுத்தனர்.

இதனால் கணேஷ் அரசின் முடிவை எதிர்த்து கோர்ட் படியேறினார். அங்கேயும் அவருக்கு உடனே வெற்றி கிட்டவில்லை. சுப்ரீம் கோர்ட்தான் அவருக்கு நீதியைக் கொடுத்தது. உயரத்தைப் பற்றி கவலைப்படாமல் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கொடுக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து 2019ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து, இப்போது குஜராத் அரசு அவர் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கணேஷ் விட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 6 பேர் பெண்கள். கணேஷ் மட்டும்தான் ஆண் ஆகும்.
இது குறித்து கணேஷ் கூறுகையில், ''எனது குடும்பம் இன்னும் கட்டி முடிக்கப்படாத வீட்டில்தான் வசித்து வருகிறது. பணப் பிரச்னையால் வீடு கட்டுவது பாதியிலேயே நிற்கிறது. எனது குடும்பத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய செங்கல் வீடு கட்டுவதுதான் எனது குறிக்கோள்.
பணம் இல்லாமல் பல முறை கட்டுமானப் பணி நின்று இருக்கிறது. இப்போது எனக்கு சம்பளம் வரும் என்பதால் என்னால் இனி வீட்டைக் கட்டி முடிக்க முடியும்.
மருத்துவக் கல்லூரியிலும் நான் மிகப்பெரிய சவாலைச் சந்தித்தேன். அனாடமி வகுப்பில் எனது நண்பர்கள், பேராசிரியர்கள் எனக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்குவார்கள். இதே போன்று ஆபரேசன் டேபிளில் எனக்கு உயரம் காணாது. எனவே எனது நண்பர்கள் என்னை அவர்களது தோளில் தூக்கிக்கொள்வார்கள்.
இதனால் என்னால் ஆபரேசன் டேபிளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனது நண்பர்கள், பேராசிரியர்கள் எனக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தார்கள். எனது உயர பிரச்னை நான் கற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்காதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர்.
என்னை முதல் முறையாக நோயாளிகள் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டனர். அவர்களிடம் நான் டாக்டர் என்று சொன்ன பிறகு என்னை முழுமையாக நம்பினர்'' என்று கணேஷ் கூறினார்.
இப்போது நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வருபவர்கள் மத்தியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் 2018ம் ஆண்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி நேர்முகத்தேர்வுக்குச் சென்ற போது அவருக்கு சீட் கொடுக்க மறுத்துவிட்டனர்.
உயரம் குறைவாக இருப்பதால் அவசர கேஸ்களைக் கையாள முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து தான் படித்த பள்ளி முதல்வரின் துணையோடு மாவட்ட ஆட்சித்தலைவரை அணுகி தன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவரது உயரத்தைக் காரணம் காட்டி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு மாநில கல்வி அமைச்சரை அணுகினார். அவரும் கைவிரித்துவிட்டார். இறுதியில் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றமும் கைவிரித்தது.
அதன் பிறகே சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றார். சுப்ரீம் கோர்ட்தான் கணேஷிற்கு அட்மிஷன் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு அட்மிஷன் கிடைத்து மருத்துவம் படித்து முடித்து, இப்போது அரசு மருத்துவமனையில் டாக்டராக சேர்ந்துள்ளார்.





















