``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
"வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்"- காசியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தனுஷ்
பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் நாளை (நவ.28) வெளியாக இருக்கிறது.
கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை 'ராஞ்சனா', 'அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார்.
இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருக்கின்றனர்.

இதனிடையே வாரணாசியில் உள்ள கங்கை கறைக்கு தனுஷ், கிருத்தி சனோன், ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் 'ராஞ்சனா' படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்கு சென்ற தனுஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "‘குந்தன்’ ( ராஞ்சனா படத்தில் தனுஷின் கதாபாத்திரம்) பத்தாண்டுகளைத் தாண்டியும் என்னை விட்டுப் பிரியாமல் தொடரும் ஒரு கதாபாத்திரம்.
இன்றும் காசியின் குறுகிய தெருக்களில் நடக்கும்போது, யாராவது ‘குந்தன்!’ என்று அழைத்தால், நான் திரும்பி பார்த்து சிரித்துவிடுகிறேன்.
இப்போது மீண்டும் அதே தெருக்களில் நடக்கும் போது, அதே வீட்டின் முன் உட்காரும் போது, அதே டீக்கடையில் டீ குடிக்கும் போது, எனக்கு குந்தனை அளித்த அந்த மனிதருடன் புனித கங்கை கரையில் சுற்றும் போது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.



















