செய்திகள் :

`சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி

post image

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

'அஞ்சான்' ரீ-ரிலீஸ்
'அஞ்சான்' ரீ-ரிலீஸ்

இன்று சென்னையில் நடைபெற்ற 'அஞ்சான்' ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, "சூர்யா படங்கள் எல்லாத்தையும் இப்போ டார்கெட் பண்றாங்களானு தெரியல. அதுவும் இங்க இருக்கு. நிறைய நெகட்டிவிட்டு இருக்கு.

இருந்தாலும் நல்ல படம் கொடுத்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

2014ம் ஆண்டு 'அஞ்சான்' ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்'.

நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன்.

ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க.

'அஞ்சான்' ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் லிங்குசாமி பேச்சு
இயக்குநர் லிங்குசாமி

அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து.

நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து 'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன்.

ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி - தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் 'அஞ்சான்' படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை' ரீ-ரிலீஸ் செய்கிறேன்" என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான்" - நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி!

ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்.மலையாளத்தில் 1986-ல் "அபரன்" என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு 'கோகுலம்' படம் மூலம் ... மேலும் பார்க்க

Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்

ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் 'ரிவால்வர் ரீட்டா'. ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திர... மேலும் பார்க்க

Viral AI: ''நடிகர்களுடைய ஆசையின் வெளிப்பாடுதான் இது!" - வைரல் ஏ.ஐ போட்டோ எடிட்டர் ஹரி!

கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயத்தை சாத்தியப்படுத்திக் காட்டுவதுதான் ஏ.ஐயின் மேஜிக். கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உச்... மேலும் பார்க்க