செய்திகள் :

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

post image

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 - 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது ஒரு ரகம் என்றால், கடைசி டெஸ்ட்டில் 549 டார்கெட் சேஸிங்கில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது இன்னொரு ரகம்.

இந்த ஒரு சீரிஸ் தோல்வியால் சொந்த மண்ணில் சுமார் மூன்று தசாப்தங்களாக இந்தியா கட்டிக்காத்து வந்த பல தனித்துவ சாதனைகள் எல்லாம் நொறுங்கிப் போய்விட்டன. அவை என்னென்ன என்பதை வரிசையாகப் பார்க்கலாம்.

India vs South Africa
India vs South Africa

25 வருடங்களுக்குப் பிறகு!

இந்திய அணி கடைசியாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் தோல்வி. அது நடந்து 25 வருடங்களுக்குப் பிறகு இன்று அதைவிட மிக மோசமாக 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றிருக்கிறது.

30 வருடங்களுக்குப் பிறகு!

சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் ஒருவர்கூட சதம் அடிக்காத நிகழ்வு இதற்கு முன்பு 2 முறை நிகழ்ந்திருக்கிறது.

முதல்முறையாக 1969-ல் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

அதன்பிறகு 26 வருடங்கள் கழித்து 1995-ல் அதே நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

தற்போது 30 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் ஒருவரும் சதம் அடிக்கவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

41 வருடங்களுக்குப் பிறகு!

இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் 1983-ல் வெஸ்ட் இன்டீஸுக்கெதிராகவும், 1984-ல் இங்கிலாந்துக்கெதிராகவும் என சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்தது.

அதன்பிறகு 41 வருடங்களுக்குப் பின் 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், 2025-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் என சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

3-வது முறை!

இந்திய அணி தன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணியிடம் 2 - 0 என ஒயிட் வாஷ் ஆனது.

அதன்பிறகு 24 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் கடந்த ஆண்டு 3 - 0 ஒயிட் வாஷ் ஆனது.

தற்போது தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்தியா.

Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண... மேலும் பார்க்க

IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம்" - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்... மேலும் பார்க்க

IND v SA: "அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அ... மேலும் பார்க்க

IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி... மேலும் பார்க்க

Smriti Mandhana: பலாஷ் முச்சல் குறித்து பரவும் தகவல்; UnFollow செய்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெற இருந்தது. இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்... மேலும் பார்க்க

2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன.இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்... மேலும் பார்க்க