கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!
Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!
ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற குடியிருப்பு வளாகத்தில் பற்றியிருக்கிறது.
❗️Several residential high rise buildings are burning in Hong Kong.
— cvetko35 (@cvetko35) November 26, 2025
The fire started at the Wang Fuk Courthouse in Hong Kong's northern Taipou district.
This is a residential complex with 2000 apartments consisting of eight buildings.
Fatalities confirmed. pic.twitter.com/PkME99Qhe1
டாய் போ என்பது ஹாங்காங்கின் வடக்கு எல்லையில், சீன நகரமான ஷென்சென் அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி. வாங் ஃபுக் கோர்ட் வளாகத்தில் A முதல் H வரை 8 கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 31 தளங்கள் வரை அடுக்குகள் உள்ளன. இந்த பெரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழப்பு
தீ விபத்து ஏற்பட்ட வளாகத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் மொத்தம் 28 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் என்றும் கூறப்பட்டுள்ளது.
This fire in Hong Kong’s Tai Po district killed at least 13 people (including a fire man). It’s raging out of control through 7 of 8 towers of this public housing development that’s home to more than 4,000 people#HongKongpic.twitter.com/vZvljZrclM
— Ivan Watson (@IvanCNN) November 26, 2025
தீயை அணைக்கும் பணிக்காக, தீயணைப்பு வீரர்கள் 128 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 57 ஆம்புலன்ஸ்களைச் சம்பவ இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர்.
தீ பிடித்த கட்டடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல் இல்லை. முதியவர்கள் பெரும்பான்மையாக தீவிபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


















