செய்திகள் :

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

post image

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ளது. தங்கபாண்டியன் விவசாய தோட்டத்தைத் தாண்டிதான் மாரிசாமியின் தோட்டத்திற்குச் செல்ல முடியும்.

தங்கபாண்டியன் தனது தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து விடாமல் இருப்பதற்காகச் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாரிசாமி தனது தோட்டத்திற்கு உரம் போடுவதற்காக தங்கபாண்டியன் தோட்டத்தைத் தாண்டி சென்றுள்ளார். அப்போது மாரிசாமியின் கைலி பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உள்ளது.

மாரிசாமி
மாரிசாமி

வேலியில் சிக்கிய கைலியை எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மாரிச்சாமி மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி காவல் நிலைய போலீசார் மாரிச்சாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்வேலியில் சிக்கி உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.

இதனைத் தடுக்க கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் குறிப்பிடத்தக்கது.

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத... மேலும் பார்க்க

Tejas: துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது - அதிர்ச்சி வீடியோ

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள... மேலும் பார்க்க

சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

சிவகாசியில் ரீல்ஸ் மோகத்தில் சாலையில் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போன்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை பார்த்துக்கொண்டிருந்த டூவீலரில் சென்ற நபர் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்... மேலும் பார்க்க

கேரளா: பஸ் மோதி 4 வயது சிறுமி பலி; பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செறுதோணி அருகே உள்ள தடியம்பாடு பரப்பள்ளிலைச் சேர்ந்த பென் ஜான்சன் என்பவரது மகள் ஹேசல் பென். நான்கு வயதே ஆன ஹேசல் பென் வாழத்தோப்பு பகுதியில் உள்ள கிரிஜோதி பள்ளியில் பிளே... மேலும் பார்க்க

மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துமதுரை ஜீவா ந... மேலும் பார்க்க