Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள...
Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இது வரும் புதன்கிழமை (26-ம் தேதி) அன்று புயலாக வலுப்பெறும் எனவும், இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, 'சிங்கம்' எனப் பொருள்படும் ‘சென்யார்' எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களின் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

















