செய்திகள் :

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

post image

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் நயினாரகரத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டிருக்கிறார்.

கண்டக்டர் நாகேந்திரன்

கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி பேருந்தில் இருந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற சுப்பையா பேருந்து முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு காலணியை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றனர். சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இதனையடுத்து இலத்துார் போலீஸார் கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று... மேலும் பார்க்க

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம்... மேலும் பார்க்க

சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்

சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிற... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக... மேலும் பார்க்க