செய்திகள் :

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம்.

வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி

பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா?

இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்" என்றார்.

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்த... மேலும் பார்க்க

`மதுரைக்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையெல்லாம் அதிமுக ஆட்சியில்தான் வரும்!'- ராஜன் செல்லப்பா

"திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்படுகிறார், திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் வழக்கு என ஒரே நாளில் ஊடகங்களில் பல செய்திகள் வருகிறது" என்று திமுக குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா பேசி... மேலும் பார்க்க

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்ப... மேலும் பார்க்க