புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! ...
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன,
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது.

மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.



















