Deva: ``இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' - உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்ப...
``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் கபடி அணி வீரர் கார்த்திகாவும், ஆடவர் அணி வீரர் அபினேஷும் வருகை தந்துள்ளனர்.

வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தினரும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் கபடி வீரர்களையும் உற்சாகமாக வரவேற்றனர்.
கபடி வீராங்கனை கார்த்திகா பேசும்போது, "கபடி விளையாட்டு மிகவும் கடுமையானது. விளையாட்டில் அடிபட்டால் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்டுவருவது கடினமானது. அடிபட்டவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; குடும்பத்தினரால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது," என்று கூறினார்.
இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர்.
வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர்.

விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம் முக்கியம்.
தேசிய அளவில் விளையாடப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. “தமிழகத்திற்காக 11 முறை விளையாடி 8 முறை பதக்கம் வென்றுள்ளேன். கிரிக்கெட்டிலும் பெண்கள் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

















