செய்திகள் :

Delhi: ``செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA

post image

தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IED) பயன்படுத்தி உமர் உல் நபி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.

அதிகாரிகள் கைது செய்த நபியின் நெருங்கிய கூட்டாளியின் மூலமாக இதனை உறுதி செய்துள்ளனர்.

Delhi Blast
Delhi Blast

NIA அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், பாம்போர் ஒன்றியத்தில் உள்ள சம்பூரா கிராமத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை கைது செய்தனர். இவர் நவம்பர் 10 அன்று 13 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக்குதலை நடத்த நபியுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் பெயரிலேயே வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புல்வாமாவைச் சேர்ந்த உமர் உன் நபு ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகிறது.

இந்த வெடிப்புடன் தொடர்புடைய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை NIA ஞாயிறு அன்று (நவ. 16) விடுதலை செய்துள்ளனர். இவர்களை முக்கிய குற்றவாளியான நபியுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்தது.

விடுவிக்கப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் நூஹ் பகுதியில் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவர்கள் முன்பு நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பில் இருந்துள்ளனர். வெடி மருந்துக்கான ரசாயனங்கள் உர வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டதா என்ற ரீதியிலும் NIA விசாரணை நடத்தியது.

இந்த வழக்குக்காக NIA, வெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை விசாரித்துள்ளது. இதில் டெல்லி காவல்துறை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்யவும், பெரிய சதியை வெளிக்கொண்டு வரவும் பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. `இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்... மேலும் பார்க்க

ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் தகவல் பரவியது.இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்றும் வதந்தி ... மேலும் பார்க்க

``போலி வாக்குகளை நீக்கினால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது, திமுக அஞ்சுகிறது'' -அதிமுக சரவணன்

"போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வருகிறது" என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.எஸ்... மேலும் பார்க்க

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்.இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.... மேலும் பார்க்க