“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம்" - செங்கோட்டையன் ர...
ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்கன் மாஜ்ரா பகுதியில் உள்ள மைதானத்தில் ஹர்திக் என்ற அந்தச் சிறுவன் பயிற்சி செய்துள்ளார். அப்போது தரையில் சரியாக நடப்படாமல் இருந்த அந்தக் கூடைப்பந்துக் கம்பம் முன்னோக்கிச் சாய்ந்து அவரது மார்பில் விழுந்துள்ளது. அவரது நண்பர்கள் உடனடியாக ஓடிச் சென்று உதவியபோதும், துரதிர்ஷ்டவசமாக சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. சி.சி.டி.வி காட்சிகளைப் பார்க்கும்போது, ஹார்திக் மைதானத்தில் தனியாகப் பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறது. கூடைப்பந்துக் கம்பத்தின் மையத்தில் உள்ள three-point line -னிலிருந்து ஓடிவந்து, அவன் குதித்து கூடைக்குள் பந்தைத் போட்டு பயிற்சி செய்க்கிறார்.
சிறுவன் கூடைப்பந்துக் கூடையில் உள்ள வட்டமான 'ரிம்மை' (rim) பிடித்துத் தொங்க, கம்பம் வேரோடு பெயர்ந்து அவர் மீது விழுகிறது. கம்பத்தின் முழு எடையும் சிறுவனின் மார்பில் இறங்கியிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பர்களும், சக வீரர்களும் உடனடியாக மைதானத்தை நோக்கி ஓடிவந்து, கம்பத்தைத் தூக்கி, ஹார்திக்கை மீட்டுள்ளனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக 16 வயது ஹர்திக் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
It’s not death, it’s murder, negligence and apathy killed this talented young athlete from Haryana. A basketball pole took the life of Hardik Rathi, on the court itself. RIP pic.twitter.com/FFZ7pd7ApF
— Sanjay Kishore (@saintkishore) November 26, 2025
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவின் பகதூர்கர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பதினைந்து வயது அமன் ஒரு மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு கூடைப்பந்து கம்பம் அவர் மீது விழுந்தது.
உள்காயங்களால் அவதியுற்ற அமன் ரோஹ்தக்கின் பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஹரியானாவில் அடுத்தடுத்து இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தால், விளையாட்டு மையங்களின் உட்கட்டமைப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.




















