செய்திகள் :

`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹர்பா பாத்திமா எனப் பெயர் வைத்தனர்.

அக்பர் பாஷா தனது குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள அமீர் பாஷா என்பவரின் வீட்டு மேல்மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை, அக்பர் பாஷா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி அஸ்லியா தஸ்மின், குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

அஸ்லியா தஸ்மின்

மதியம் 12 மணியளவில், வீட்டில் இருந்த 3 மாத பெண் குழந்தை மாயமாகிவிட்டதாகக் கூறி அஸ்லியா தஸ்மின், தரை தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் சென்று கூறியுள்ளார். அஸ்லியா தஸ்மினுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளரும் குழந்தையை தேடியுள்ளார். அப்போது, சந்தேகப்பட்டு வீட்டு படிக்கட்டின் கீழுள்ள தண்ணீர்தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில், மர்மமான முறையில் குழந்தை இறந்துகிடந்தது.

இதையடுத்து, குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் சந்தேக வலையில் குழந்தையின் தாய் அஸ்லியா தஸ்மீனே சிக்கினார்.

கொலை செய்யப்பட்ட குழந்தை

கிடுக்கிப்பிடி விசாரணையில், பெற்றெடுத்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை அஸ்லியா தஸ்மின் ஒப்புக்கொண்டார். 3 குழந்தைகளை வளர்க்க முடியாததாலும், தூங்க கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தையை கொல்லும் முடிவுக்கு வந்ததாக அஸ்லியா தஸ்மின் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர். பெற்றத் தாயே கைக்குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகி... மேலும் பார்க்க

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விச... மேலும் பார்க்க

நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தர். அப்போது அவரை கடத்தி பாலிய... மேலும் பார்க்க

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச ... மேலும் பார்க்க

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம்... மேலும் பார்க்க

மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு

பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் ம... மேலும் பார்க்க