BB Tamil 9: "நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல" - காட்டமான அமித்; கண்ணீர...
முதுமலை: 391 இடங்களில், 782 ஆட்டேமெட்டிக் கேமராக்கள் - டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு!
தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம் , கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வன உயிர் சரணாலயம் ஆகிய வனங்களை உள்ளிடக்கிய பகுதியே உலக அளவில் வங்கப் புலிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

ஒருங்கிணைந்த இந்த வனப்பரப்பில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்தாலும், காடு போதாமை, மனித செயல்பாடுகள், பெருகி வரும் களைத் தாவரங்கள் போன்றவை பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிகளின் அடிப்படையில் புலிகள் காப்பகங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி
ஒவ்வொரு புலியையும் அதன் பிரத்யேக வரிகளைக் கொண்டு அடையாளம் காண்பதுடன் எண்கள் அடிப்படையில் அடையாளம் சூட்டி தரவுகளை டிஜிட்டல் முறையில் பரமாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2026 - ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 391 இடங்களை தேர்வு செய்து 782 ஆட்டேமெட்டிக் கேமராக்களை பொருத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 30 நாள்களில் இந்த கேமராக்களில் பதிவாகும் புலிகள் அடையாளம் கண்டு அதன் தரவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளனர். இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி அதன் வாழிட எல்லை, இணை, உடல்நிலை உள்ளிட்ட பல தரவுகளையும் துல்லியமாக அறிய என்கிறது முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம்.

















