செய்திகள் :

யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி

post image

சம காலத்தில் நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சில சமயங்களில் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான ஆண்டுகளும் அரிதாக வாழ்கின்றன.

அதேபோல் பாலூட்டிகளில் மிக நீண்ட காலமாக கருவைச் சுமக்கும் உயிரினமாகவும் யானைகள் தான் உள்ளன.

இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை
இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை

கிட்டத்தட்ட 22 மாதங்கள் யானைகளின் கர்ப்ப காலமாக இருக்கிறது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுப்பதும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.

யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை
இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை

இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், "சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 - ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம்.

57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26

நெல்லை: கொட்டி தீர்க்கும் கனமழை|அருவி சுற்றுலா தலங்கள் மூடல்| வாழைகள் சேதம் |#Rain Alert 2025-26நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறையில் கடும் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் செல்ல தடை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெர... மேலும் பார்க்க

நீலகிரி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! - `வாவ்’ ஊட்டி

ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட... மேலும் பார்க்க

தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album

வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்வெறிச்சோடி காட்சியளிக்கும் வீத... மேலும் பார்க்க

தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும... மேலும் பார்க்க