செய்திகள் :

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

post image

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Visa
Visa

ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.

doctors death
doctors death

ரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்.

ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்

த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட க... மேலும் பார்க்க

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க

திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்... மேலும் பார்க்க

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்... மேலும் பார்க்க

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று... மேலும் பார்க்க