செய்திகள் :

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

post image

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.

ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது.

மழை
மழை

இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும்.

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மழை
மழை

நவம்பர் 25, 26 ஆம் தேதி சூறவாளிக்காற்று 35 - 45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?

இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இன்று தென்காசி, திருநெல்வ... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.இது வ... மேலும் பார்க்க

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.! மேலும் பார்க்க

Rain Alert: "இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிற... மேலும் பார்க்க

தமிழ்நாடு: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 நாள்கள் தொடர் மழை! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்த... மேலும் பார்க்க

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாட்டில் அரியலூர்,... மேலும் பார்க்க