"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் ம...
Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?
இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இன்று தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நாளை(நவம்பர் 25) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (நவம்பர் 26) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 27-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 28-ம் தேதி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வரும் 30-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

















