டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ...
மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்
எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூச்சிகள், உள்ளுணர்வு அடிப்படையில் மட்டுமே செயல்படும் என்றே கருதப்பட்டு வந்தது. அவை கூடு கட்டுகின்றன, உணவு சேகரிக்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன என்பதைத் தாண்டி, அவற்றிற்கு என்று தனிப்பட்ட உணர்வுகள் ஏதும் இருக்காது என்றுதான் கருதப்பட்டு வந்தது.
ஆனால் 'பிஎல்ஓஎஸ் பயாலஜி' (PLOS Biology - 2023) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது.

பூச்சிகளின் நரம்பு மண்டலம் மற்றும் மூளை அமைப்பு சிறியதாக இருந்தாலும், அவை உணர்வு நிலைகளை வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முக்கியமாக ஆபத்தான நேரங்களில் அவை 'வலி' போன்ற உணர்வை அனுபவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும், இது வெறும் உடல் சார்ந்த எதிர்வினை மட்டுமல்லாமல் அவற்றின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களின் மகிழ்ச்சி, சோகம் மற்றும் உந்துதலைக் கட்டுப்படுத்தும் டோபமைன் (Dopamine) மற்றும் செரோடோனின் (Serotonin) போன்ற வேதிப்பொருட்களே பூச்சிகளின் மூளையிலும் சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது பூச்சிகளுக்கும் அடிப்படை அளவிலான உணர்வுகள் இருப்பதற்கான அறிவியல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.
பூச்சிகளுக்கு காயம் ஏற்பட்டால், அவை அந்த வலியை நினைவில் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அதேபோன்ற சூழ்நிலை வந்தால் அதைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது அவை வலியை வெறும் உணர்வாக மட்டும் பார்க்காமல், அதை அனுபவமாக மாற்றிக்கொள்வதை அதன் நடத்தைகள் மூலம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
















