டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ...
திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.
அப்பொழுது, திருச்சி ரெயில் நிலைய நடைமேடையில் வந்து இறங்கும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தங்களை காவல்துறை ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லி தன்னிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றதாக திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை பெற்ற ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் உண்மை என தெரிய வந்தது. மேலும், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி ரெயில்வே போலீஸான ஜான்சன் கிரிஸ்டோ குமார் (43), தீனதயாள் (37) மற்றும் ரஞ்சித் (40), ராஜேந்திரன் (45) என்ற திருவெறும்பூரைச் சேர்ந்த இரண்டு என்று மொத்தமாக நான்கு நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். பயணியிடம் ரூ. 60 லட்சத்தை போலீஸார் உள்பட நான்கு பேர் அபகரித்த சம்பவம், திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




















