செய்திகள் :

மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?

post image

வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான்.

அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார்.

அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே.

ஹெச்-1பி விசா | H-1B Visa
ஹெச்-1பி விசா

'பிராஜெக்ட் ஃபயர்வால்' திட்டம்

இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, 'பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)' என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம்.

இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும்.

இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, 'குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?' என்பதை ஆராய்வது தான்.

இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும்.

விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

அதிமுகவில் இருந்து எடப்பாடியால நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் தந்திரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: 8 மணி நேரம் `ரோடு ஷோ’... தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்ட இடங்கள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை"நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' - முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போத... மேலும் பார்க்க