செய்திகள் :

அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள்

post image

நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் திமுகவினரால் கட் அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பது மக்களும் பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது.

உதயநிதி பேனர்
உதயநிதி பேனர்
உதயநிதி பேனர்
உதயநிதி பேனர்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கமாக அன்பகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அறிவாலயத்தில் வெகு விமர்சையாக தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் உதயநிதியின் பிறந்தநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் திமுகவினர் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்திருக்கின்றனர். பொது இடங்களில் பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட், கொடிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என நீதிபதிகள் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்
அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்
அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்
அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்
அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்
அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள்

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கடந்த டிசம்பரில்,'இனி கட்சி நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.' என திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகள், சொந்தக் கட்சியின் அறிவுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் உதயநிதியின் பிறந்த நாளுக்காக திமுகவினர் ஆபத்தான முறையில் வைத்திருக்கும் கட் அவுட்கள் பல இடங்களில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய ஜங்ஷனிலும் இப்படியாக எந்த ஊன்றுதலும் இல்லாமல் பேட்ச் வடிவ பதாகையையும் பேனரையும் வைத்திருந்தனர்.

உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்
உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும்

க்ரீன்வேஸ் சாலை முழுவதும் பேனர்மயமே. அங்கிருந்து வெளியே வந்து ஆர்.ஏ.புரத்துக்குள் நுழைகையிலும் சாலை ஓரத்தில் 30 அடிக்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உதயநிதியின் கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். அதை கடந்து சில மீட்டர் தூரத்திலேயே மீண்டும் நடைபாதையை மறித்து காலண்டர் வடிவில் ஒரு கட் அவுட். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய பகுதியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மக்களுக்கு அத்தனை இடையூறாக இருக்கிறது.

'எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்...' என உதயநிதி செய்தி சொல்லியிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.

``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு ... மேலும் பார்க்க

TVK: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பொறுப்புகள் - அறிவித்த விஜய்!

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பதவி பொறுப்புகளை வழங்கி இருக்கிறார் விஜய். கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக... மேலும் பார்க்க

TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!

இரண்டு நாட்களாக சென்னையை ரவுண்ட் அடித்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த செங்கோட்டையன், இன்று பனையூருக்கு வண்டியை திருப்பிவிட்டார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.அந்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: திமுக தொண்டர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் | Photo Album

TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.!" - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் மேலும் பார்க்க

`புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?

யார் இந்த சாமிநாதன் ?த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அவரின் பனையூர் அலுவலகத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அந்த விழாவில் புதுச்சேரி பா.ஜ.க-வ... மேலும் பார்க்க