``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
Jemimah Rodrigues: "தோழி ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க" - WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) நடந்துவரும் 2025 மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக WBBL பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், தற்போது திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழலில் தனது தோழிக்கு ஆதரவாக இருக்க அவர் இந்தியாவிலேயே தங்கியிருக்க முடிவெடுத்துள்ளார்.

இதனால் சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என பிரிஸ்பேன் ஹீட் அணி உறுதி செய்துள்ளது.
நவி மும்பையில் இந்திய மகளிர் அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்றதையடுத்து, ரோட்ரிக்ஸ் ஹீட் அணிக்காக விளையாட ஆஸ்திரேலியா சென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது சீசனில் பாதியிலேயே அவர் விலகுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "ரோட்ரிக்ஸ் தனது தோழிக்கு ஆதரவளிக்க இந்தியாவில் தங்கியிருப்பதனால், டபிள்யூ.பி.பி.எல். சீசனின் மீதமுள்ள நான்கு போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருக்க ஹீட் அணி ஒப்புக்கொண்டுள்ளது" என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்மிரிதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு!

ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, திருமண விழாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்மிருதியின் தந்தை சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால், மாப்பிள்ளை பலாஷ் முச்சல் காய்ச்சல் மற்றும் அசிடிட்டி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



















