செய்திகள் :

இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன?

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு முதல் இரண்டு எடிஷனில் (2019-21, 2021-23) இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி.

கடந்த எடிஷனில் (2023-25) இறுதிப் போட்டிக்கு செல்ல சுலபமான வாய்ப்பிருந்தும் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 - 0 என தொடரை இழந்து அந்த வாய்ப்பைக் கடினமாக்கிக் கொண்ட இந்தியா, அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடம் 3 - 1 எனப் பார்டர்-கவாஸ்கர் தொடரை இழந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியா ஒயிட் வாஷ் ஆனதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சவாலானதாக மாறியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி - BCCI
India - BCCI

நடப்பு எடிஷனில் (2025-27) இதுவரை இந்திய அணி 3 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கிறது.

அதில், 9 டெஸ்ட் போட்டிகளில் (இங்கிலாந்து 5, வெஸ்ட் இண்டீஸ் 2, தென்னாப்பிரிக்கா 2) 4-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டு புள்ளிப்பட்டியலில் 48.15 சதவிகித புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் 55.88 சதவிகித புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது.

தற்போது 7 சதவிகித புள்ளிகள் குறைந்து 5-வது இடத்துக்கு இந்தியா இறங்கிவிட்டதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.

நடப்பு எடிஷனில் இந்தியாவுக்கு இன்னும் 3 டெஸ்ட் தொடர்கள்தான் இருக்கிறது.

அடுத்தாண்டு ஆகஸ்ட்டில் இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அக்டோபரில் நியூசிலாந்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 2027 ஜனவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடவிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியாயன்ஷிப் (2025-27) புள்ளிப்பட்டியல்
WTC 2025-27 Points Table

இந்த 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 வெற்றி பெற்றால்தான் இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அதற்கும் மற்ற அணிகளின் முடிவுகள் அவசியம்.

9-க்கு 9-லும் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்குச் செல்வது உறுதி. ஒருவேளை 2-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டி கனவை இந்தியா மூடிவைத்துவிடலாம்.

கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - பவுமா (தென்னாபிரிக்கா)
கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - பவுமா (தென்னாபிரிக்கா)

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 4 வெற்றியுடன் 100 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்பு சாம்பியன் தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் 3-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 75 சதவிகித புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 - 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆ... மேலும் பார்க்க

Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண... மேலும் பார்க்க

IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம்" - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்... மேலும் பார்க்க

IND v SA: "அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அ... மேலும் பார்க்க

IND v SA: `25 ஆண்டுகளுக்குப் பின்.!' - இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி... மேலும் பார்க்க

Smriti Mandhana: பலாஷ் முச்சல் குறித்து பரவும் தகவல்; UnFollow செய்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெற இருந்தது. இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்... மேலும் பார்க்க